புதிய வகை கரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தென்படவில்லை: மத்திய அரசு
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தென்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தென்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் தெரிவித்தது:
"இதுவரை கிடைத்துள்ள தரவுகளை ஆழமாக புரிந்துகொண்டதன் அடிப்படையிலும், எங்களது ஆய்வு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலும் தற்போதைய நிலையில் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது விரிவான நடவடிக்கைகள் மூலம் இந்த புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதனால் நெறிமுறைகளில் மாற்றம் இருக்காது.
Advertisement
இந்த புதிய வகை வைரஸ், நோய் பரவும் தன்மையை 70 சதவிகிதம் அதிகரிக்கிறது. இதனை சூப்பர் பரவல் வைரஸ் என்று அழைக்கலாம். ஆனால், நோயின் தீவிரத் தன்மையையோ, மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடிய நிலை அல்லது உயிரிழப்பு விகிதங்களையோ இது அதிகரிக்காது. இது அதிகளவிலான மக்களைத் தாக்கும் தன்மையுடையது. அதுதான் கவலைக்குரியது.
அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுபோன்ற வைரஸ் இந்தியாவில் இன்னும் தென்படவில்லை."