முகப்பு
இந்தியா

உ.பி. ஊராட்சி தேர்தலில் போட்டி: பீம் ஆர்மி தலைவர்

​உத்தரப் பிரதேச ஊராட்சித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:


உத்தரப் பிரதேச ஊராட்சித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஊராட்சித் தேர்தலில் ஆசாத் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

தலித் கிராமத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்தபோது இவற்றை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியது:

"ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அதிகாரிகள் மக்களை அச்சுறுத்துவது என்னை நடத்திய விதத்திலிருந்தே தெளிவாக தெரிகிறது. 

உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் சாலைப் பேரணிகள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்கிறார். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் இல்லாததால், அதைத் தவிர்ப்பதற்காகவே அரசு இதனை செய்கிறது."

முழு கட்டுரையைப் படிக்க →