கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 16.5 கோடியாக அதிகரிப்பு
நாட்டில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 16.5 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 16.5 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 10 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதால் தற்போது கரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.86 சதவிகிதமாக குறைந்துள்ளது. 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
Advertisement
பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தேசிய அளவிலான கரோனா பாதிப்பு விகிதத்தை விட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கப்படுவோர் விகிதம் குறைவாகவே உள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,89,240-ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 23,950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.