இரு சிங்கங்கள் தாக்கியதில் பெண் பலி
குஜராத் மாநிலத்தில் இரு சிங்கங்கள் தாக்கியதில் இயற்கை அழைப்பைக் கழிக்கச் சென்ற பெண் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தில் இரு சிங்கங்கள் தாக்கியதில் இயற்கை அழைப்பைக் கழிக்கச் சென்ற பெண் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள தன்ஃபுலியா கிராமத்தைச் சேர்ந்தவர் பாவனா. 17 வயதான இவர் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் இயற்கை அழைப்புக்காக வெளியில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவரைத் தாக்கிய இரு சிங்கங்கள் அவரின் தலையில் பலமாகக் கடித்தன. சுமார் 150 மீட்டர் தொலைவு சிங்கங்களால் இழுத்துச் செல்லப்பட்ட பாவனாவை மீட்க கிராம மக்கள் விரைந்தனர்.
எனினும் அதற்குள் பாவனா உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவ இடத்தை அடைந்த வனத்துறை அதிகாரிகள் சிங்கங்களைப் பிடிக்க அப்பகுதியில் கூண்டுகளை அமைத்துள்ளனர்.
கழிப்பறை வசதி இல்லாத நிலையில் இயற்கை அழைப்பைக் கழிக்கச் சென்ற சிறுமி, சிங்கங்கள் தாக்கி இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.