ம.பி.: லண்டனிலிருந்து திரும்பிய 33 பேர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
லண்டனிலிருந்து மத்தியப் பிரதேசம் திரும்பிய 33 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தூர்: லண்டனிலிருந்து மத்தியப் பிரதேசம் திரும்பிய 33 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அமித் மலாகர் கூறியதாவது, ''லண்டனிலிருந்து திரும்பியவர்களின் பட்டியலை மாநில சுகாதாரத்துறை வழங்கியது. அதில் 33 பேர் லண்டனிலிருந்து இந்தூர் வந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 14 நாள்களுக்கு முன்பு அவர்கள் லண்டனிலிருந்து மத்தியப் பிரதேசம் வந்துள்ளனர். அவர்களுக்கு ஆர்டி- பி.சி.ஆர். முறை மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
மத்தியப் பிரதேச மாவட்டத்தில் இந்தூர் மாவட்டம் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுகிறது. இந்தூரில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் 52,660 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 847 பேர் உயிரிழந்தனர்.
லண்டனில் உருமாறிய வீரியம் மிக்க கரோனா தொற்று பரவி வருவதால், மத்திய அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திற்கு அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.