கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு: புத்தாண்டு கொண்டாடத் தடை
கர்நாடகத்தில் இன்று (டிச.23) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கர்நாடகத்தில் இன்று (டிச.23) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர முழுமுடக்கம் அறிவிக்கப்படுவதால், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தவிர்க்க அம்மாநில முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு பேசிய முதல்வர் எடியூரப்பா, கர்நாடகத்தில் இன்று (டிச.23) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவுநேர முழு முடக்கம் அறிவிக்கப்படுகிறது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இரவு நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.