முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 9 மாதங்களுக்குப் பிறகு புரி ஜெகன்னாதர் ஆலயம் திறப்பு

ஒடிசாவில் 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக புரி ஜெகன்னாதர் ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2020 at 11:48 AM
புரி ஜெகன்னாதர் ஆலயம் (கோப்புப்படம்)
பகிர்:

ஒடிசாவில் 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக புரி ஜெகன்னாதர் ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி புரி ஜெகன்னாதர் ஆலயம் மூடப்பட்ட நிலையில், தற்போது கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கரோனா தளர்வுகளுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகள் கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதியளித்து வருகிறது.

Advertisement

இதனிடையே மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் கூட வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒடிசாவிலும் ஆலயங்களை திறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சட்டப் பேரவையிலும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 3-வது வாரத்தில் புரி ஜெகன்னாதர் ஆலயம் திறக்கப்படும் என்று ஜெகன்னாதர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (டிசம்பர் 23) முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்தல் போன்றவற்றுடன் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.