முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: மாணவர்கள் இருவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் சுகிரா கிராமத்தின் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

Updated On : 24 டிசம்பர், 2020 at 12:11 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் சுகிரா கிராமத்தின் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

காலை 6 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. சுகிரா கிராமம் அருகே கல்வி கற்பதற்காகச் சிறப்பு வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மாணவர்களின் சைக்கிளின் மீது மோதியுள்ளது. இந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் பலியாகினர். மேலும் மூன்று  பேர் காயமடைந்தனர். 

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் தர்மேந்திர சாஹு(17) மற்றும் கபில்(18) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.