முகப்பு
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி
இந்தியா

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியா

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி
பகிர்:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி கூட்டியது. இந்தக் கூட்டத்தில் குஜராத் மாநிலத்திற்கான ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் குலாப் சிங் யாதவ் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இத்தாலியா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் மாநிலத்தில் நிலவும் சுகாதாரப்பிரச்னை, ஊழல், சாலை, கல்வி உள்ளிட்ட பிரச்னைகளை உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எழுப்பும் எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளதாக இத்தாலியா தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →