முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

தில்லியில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

தில்லியில் இன்று மேலும் 758 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா

தில்லியில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

தில்லியில் இன்று மேலும் 758 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் இன்று மேலும் 758 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 85,749 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 45,521 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 40,228 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 
அதில் 758 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,21,439 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று 30 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 10,414ஆக உயர்ந்துள்ளது. 
கரோனா பாதிப்பில் இருந்து, 1,370 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,03,758-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7,267 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,762 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 
தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,118 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →