கொள்கைகளால் மேற்கு வங்கத்தை அழிக்கிறார் மம்தா: பிரதமர்
மத்திய அரசின் வேளாண் நலத்திட்டங்களை அனுமதிக்காமல் தனது கொள்கைகளால் மேற்கு வங்கத்தை முதல்வர் மம்தா பானர்ஜி அழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாகொள்கைகளால் மேற்கு வங்கத்தை அழிக்கிறார் மம்தா: பிரதமர்
மத்திய அரசின் வேளாண் நலத்திட்டங்களை அனுமதிக்காமல் தனது கொள்கைகளால் மேற்கு வங்கத்தை முதல்வர் மம்தா பானர்ஜி அழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் நலத்திட்டங்களை அனுமதிக்காமல் தனது கொள்கைகளால் மேற்கு வங்கத்தை முதல்வர் மம்தா பானர்ஜி அழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.25) விடுவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, ''பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கிடைக்கும் நிதி உதவியினை தனது கொள்கைகளால் மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். 70 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தால் பலன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பலன் பெறவேண்டிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைய முடியவில்லை.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திற்கு மேற்கு வங்கத்தில் 23 லட்சம் விவசாயிகள் இணையத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் விண்ணப்பங்களை அரசு சரிபார்க்கும் முறையினை மேற்கு வங்க அரசு நிறுத்தி வைத்தது.
மம்தாவின் அரசியல் கொள்கைகள் மேற்கு வங்கத்தை சீரழித்து வருகிறது. அவரது நடவடிக்கைகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராகவுள்ளது.
மத்திய அரசின் திட்டம் விவசாயிகளுக்கு கிடைக்காமல் செய்யும் மாநில அரசைக் கண்டித்து ஏன் போராட்டம் நடைபெறவில்லை.
முந்தைய ஆட்சியின் வேளாண் கொள்கைகளால் ஏழை விவசாயிகள் மேலும் ஏழைகளாக மாறியுள்ளனர். இதனை மாற்ற வேண்டும்'' என்று பிரதமர் பேசினார்.