‘வேளாண் சட்டங்களால் ஒரு நன்மையும் இல்லை’: தில்லி முதல்வர் கேஜரிவால்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 30 நாள்களை எட்டியுள்ளது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பெரும் தீமையே ஏற்டும் என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்காது என்று பாஜக கூறுகிறது. ஆனால் என்ன நன்மை இருக்கிறது? இப்போது விவசாயி சந்தைக்கு வெளியே விளைபொருளை விற்க முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் சந்தைக்கு வெளியே பயிரானது பாதி விலைக்கு விற்கப்படுகிறது? இந்த “நன்மை” எவ்வாறு நிகழ்ந்தது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “உண்மை என்னவென்றால், இந்தச் சட்டங்களால் நிறைய தீங்குகள் உள்ளன. ஆனால் ஒரு நன்மை கூட இல்லை” என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.