வாஜபேயி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பஹாரி வாஜபேயின் 96வது பிறந்தநாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வாஜபேயி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.