முகப்பு
இந்தியா

வாஜபேயி பிறந்தநாள்: புத்தகம் வெளியிட்டார் பிரதமர் மோடி

வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்தியா

வாஜபேயி பிறந்தநாள்: புத்தகம் வெளியிட்டார் பிரதமர் மோடி

வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜபேயின் 96-வது பிறந்தநாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காலையில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவரது திருவுருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வாஜபேயின் வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

மக்களவையில் வாஜபேயி ஆற்றிய சில சிறப்புமிக்க உரைகளும், அரிய புகைப்படங்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் பிரதமரான வாயபேயி, மக்களவையில் 10 முறையும், மாநிலங்களவையில் இரண்டு முறையும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →