முகப்பு
இந்தியா

பிரிட்டனிலிருந்து கர்நாடகம் திரும்பிய 14 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து கர்நாடகத்திற்கு திரும்பிய 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பிரிட்டனிலிருந்து கர்நாடகம் திரும்பிய 14 பேருக்கு கரோனா
பகிர்:

பிரிட்டனிலிருந்து கர்நாடகத்திற்கு திரும்பிய 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்கள் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் வகையில் அவர்களது ரத்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனிலிருந்து 2,500 பேர் கர்நாடகத்திற்கு வருகை புரிந்தனர். அதில் 1,638 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 14 பேரும் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மரபணு பரிசோதனைக்காக நாடு முழுவதும் உள்ள 10 பரிசோதனை மையங்களில் பெங்களூருவில் 2 மையங்கள் உள்ளன. அங்கு 14 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →