இந்தியா

உ.பி.யில் ‘லவ் ஜிகாத்’ சட்டத்தின் மூலம் ஒரே மாதத்தில் 35 பேர் கைது

DIN

உத்தரப்பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட திருமணத்தின் மூலம் மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டத்தின் மூலம் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கான சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சட்டம் நடைமுறைக்கு வந்ததில் முதல் வழக்கு பரேலியில் பதிவு செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் டிசம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து எட்டா பகுதியில் இருந்து 8 பேரும், சீதாபூரிலிருந்து 7 பேரும், கிரேட்டர் நொய்டாவிலிருந்து 4 பேரும், ஷாஜகஹான்பூர் மற்றும் அசாம்கரைச் சேர்ந்த தலா 3 பேரும், மொராதாபாத், முசாபர்நகர், பிஜ்னோர் மற்றும் கண்ணாஜ் ஆகிய பகுதிகளிலிருந்து தலா 2 பேரும், பரேலி மற்றும் ஹார்டோயிலிருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

‘ஸ்டார்’ திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள்!

முதல் இரண்டு கட்ட தேர்தல்களை விட 3-ஆம் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT