முகப்பு
இந்தியா

கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான மசோதாவிற்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்

மத்தியப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
மத்தியப் பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங்செளகான்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்தியப் பிரதேசத்தில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கும் மாநில சட்டப்பேரவை மூன்று நாள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சனிக்கிழமை மாநில அமைச்சரவைக்கானக் கூட்டம் முதல்வர் சிவராஜ் சிங்செளகான் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிறப்புக் கூட்டத்தில், சுதந்திரமான மத மசோதா 2020 வரைவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி யாராவது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் செளகான் கூறினார், “நாங்கள் மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றங்களை அனுமதிக்க மாட்டோம். புதிய மசோதாவின் கீழ், அதைச் செய்கிற எவருக்கும் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் வயது வந்த பெண் அல்லது பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினரை கட்டாயமாக மதம் மாற்றினால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ரூ .50,000 அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.