முகப்பு
இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: பாஜக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சியின் தலைவர் அனுமான் பெனிவால்
பகிர்:

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 31 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தது. 

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தின் ஷாஜகான்பூர்-கெடா எல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அனுமான் பெனிவால், "விவசாயிகளுக்கு எதிரான எவருடனும் நாங்கள் கைகோர்க்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் அனுமான் பெனிவால் தான் அங்கம் வகித்த மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் இருந்தும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →