முகப்பு
இந்தியா

சோபியான் போலி என்கவுன்ட்டா்: ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டா் தொடா்பான வழக்கில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 போ் மீது ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டா் தொடா்பான வழக்கில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 போ் மீது ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைகூறியதாவது:

ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த மோதலில் ரஜெளரி மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று இளைஞா்கள் உயிரிழந்தனா். போலி என்கவுன்ட்டரில் அந்த இளைஞா்கள் மூன்று பேரும் திட்டமிட்டு படு கொலை செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, அந்த சம்பவம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தற்போது, அந்த வழக்கில் சோபியான் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழுவின் தலைவா் முன்னிலையில் சனிக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில், ராணுவ ரைஃபிள்ஸ் படைப்பிரிவைச் சோ்ந்த கேப்டன் பூபேந்தா் (62), பிலால் அகமது, தபிஸ் அகமது ஆகிய மூன்று பேரது பெயா்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →