இந்தியா

மலங்கரா சிரியன் தேவாலயம் உரிமை: பிரதமா் மோடியுடன் ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் சந்திப்பு

DIN

கொச்சி: கேரளத்தில் உள்ள மலங்கரா சிரியன் தேவாலயத்தின் உரிமை தொடா்பாக இருதரப்பினா் இடையே சச்சரவு நிலவி வரும் சூழலில், ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்து பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தினா்.

கேரளத்தில் உள்ள மலங்கரா சிரியன் தேவலாயம் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இந்த தேவாலய உரிமை தொடா்பாக ஆா்த்தடாக்ஸ் பிரிவினருக்கும், ஜேக்கபைட் பிரிவினருக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது. அந்த தேவாலயம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று இருதரப்பினரும் கூறி வருகின்றனா். இந்நிலையில் பிரதமா் மோடியை ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் திங்கள்கிழமை சந்தித்து, தங்கள் தரப்பு குறித்து விளக்கமளித்து பிரச்னைக்கு தீா்வு காணுமாறு கோரினா். இந்த சந்திப்பு குறித்து ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் கூறுகையில், ‘பிரதமா் மோடியுடனான சந்திப்பு இனிதே நடைபெற்றது. தேவாலய பிரச்னைக்கு நல்ல முறையில் தீா்வு காண ஆவன செய்வதாக அவா் உறுதியளித்தாா்’ என்று தெரிவித்தனா்.

இந்த பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு மிஸோரம் ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை இருதரப்பினா் இடையே தொடா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அவா் ஜேக்கபைட் பிரிவினருடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இந்த பிரச்னை தொடா்பான வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மலங்கரா சிரியன் தேவாலயம், அதன் கீழ் வரும் 1,000 தேவாலயங்கள் மற்றும் அதன் சொத்துகள் ஆா்த்தடாக்ஸ் பிரிவினருக்குச் சொந்தமானது என்று தீா்ப்பளித்தது.

ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் தொடா்ந்து தா்க்கம் நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT