முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,537 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,537 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,537 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 3,537 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,28,603 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,913 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 18,24,934 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய அறிவிப்பில் 70 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 49,463 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 53,066 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,477 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். வெறும் 17 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →