முகப்பு
இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு அறிவுரை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2020 at 12:53 PM
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு அறிவுரை
பகிர்:

புது தில்லி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பியிருக்கும் கடிதத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று, நாளை, நாளை மறுநாள் மாநிலங்களில் நிலவும் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.

அதேவேளையில், சூழலைப் பொறுத்து இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயலுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.