விவசாயிகள் போராட்டத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல் 
இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரையில் நடைபெற்ற மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது. 

இதில் மத்திய அரசின் தரப்பில் அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 

இந்நிலையில் கடந்த 35 நாள் போராட்டத்தின் போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுவரை வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் 33 விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT