'பிரதமருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள்': விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என விவசாயிகளை காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா'பிரதமருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள்': விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என விவசாயிகளை காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என விவசாயிகளை காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் அறிவுறுத்தியுள்ளது.
இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சரும், அகாலி தளம் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கௌர் தெரிவித்துள்ளதாவது:
"புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற, நேரடியாக பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எந்தப் பலனும் தராத பேச்சுவார்த்தை நீட்டிப்பு வலையில் அவர்கள் சிக்கிவிடக் கூடாது."
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தெரிவிக்கையில், "பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய, பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீடு அவசியம். அமித் ஷா தலையீட்டுக்குப் பிறகு பிரச்னை தீரவில்லையெனில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பிரதமருடன் இருந்திருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய பிரதமருடன் அல்லது உள்துறை அமைச்சர் தலையீடு அவசியம்" என்றார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 35-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.