முகப்பு
நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை: விவசாய சங்கங்கள்
இந்தியா

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை: விவசாய சங்கங்கள்

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தில்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை: விவசாய சங்கங்கள்
பகிர்:

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தில்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் 35-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் குளிரில் பலரது உடல்நிலை மோசமடையும் நிலையில், விவசாயிகள், சாலைகளில் கூடாரம் அமைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று (டிச.30) மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததாலேயே விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாரதிய கிஸான் யூனியன் அமைப்பை சேர்ந்த ராகேஷ் டிகெய்ட் தெரிவித்துள்ளார்.

காஸிப்பூர் எல்லையில் பேசிய அவர், ''வலுவான எதிர்க்கட்சி நாட்டிற்கு அவசியமான ஒன்று. அவர்களுக்கு அரசு அச்சப்பட வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளால் அரசு அச்சம்கொள்வதில்லை. இதனால் தான் விவசாயிகள் சாலைக்கு வந்துள்ளனர். 

எதிர்க்கட்சி சாலைகளில் இறங்கி தொடர்ந்து போராட வேண்டும். வேளாண் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் மேடைகளை அமைக்க வேண்டும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →