விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி: தோமர்
விவசாயிகளுடன் நடைபெற்ற 6-ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி: தோமர்
விவசாயிகளுடன் நடைபெற்ற 6-ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை தெரிவித்தார்.
விவசாயிகளுடன் நடைபெற்ற 6-ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 4-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் தோமர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது:
"இன்றைய பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக இருந்தது. இது நேர்மறையாக முடிந்துள்ளது. இன்று விவாதிக்கப்பட்ட 4 விவகாரங்களில் 2 விவகாரங்களில் உடன்பாட்டு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் நிலவும் குளிர் காரணமாக வயது மூத்தவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை வீடுகளுக்கு அனுப்புமாறு விவசாயத் தலைவர்களுடன் கோரிக்கை வைத்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4-ம் தேதி நடைபெறுகிறது.
முதல் விவகாரம் சுற்றுச்சூழல் சார்ந்த அவசர சட்டம் தொடர்புடையது. பராலிக்களுடன் சேர்க்கப்படுவது குறித்து விவசாய சங்கங்கள் கவலை தெரிவித்தனர். விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது.
மின்சார சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால் பெரிதளவில் இழப்பு நேரிடும் என விவசாயிகள் கருதுகின்றனர். மின்சாரத்துக்கான மானியத்தை மாநில அரசுகள் வழங்கும் நடைமுறையே நீடிக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
இன்று 4 விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. அதில் 2 விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது.
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வேளாண் சங்கங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என அரசு தெரிவித்து வருகிறது. அதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கருதுகின்றனர். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியாக அணுகுவது குறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் ஜனவரி 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை தொடரும்" என்றார் அவர்.