தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை
தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி தலைமைச் செயலரும் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவருமான விஜய் தேவ் இதற்கான அறிவிப்பை நேற்று (டிச.30) வெளியிட்டுள்ளார்.
இரவு நேர பொதுமுடக்கத்தின்போது பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் தேவ் கூறினார்.
தில்லியில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கு ஏற்ப ஒரு சில பகுதிகளில் இரவுநேர பொதுமுடக்கம் அறிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடந்த 28-ஆம் தேதி அறிவுறுத்திய நிலையில், தில்லியில் இரண்டு நாள்களுக்கு இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.