முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது: 15 பேர் காயம்

மகாராஷ்டிரத்தில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர். 
மகாராஷ்டிர மாநிலம், 31 பேருடன் தனியார் பேருந்து ஒன்று கன்கவ்லி நோக்கி புறப்பட்டது. ரத்தனகிரி மாவட்டம் காஷெடி காட் மலைப்பகுதியில் இன்று அதிகாலை பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →