இந்தியா

நாட்டில் அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆனது

DIN


புது தில்லி: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 25 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை காலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்களில் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிதீவிர கரோனா தொற்றுப் பரவிய 20 பேரும் அடங்குவர்.

இந்த 25 பேரும் தனிமைப்படுத்தி சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இவர்களுடன் விமானத்தில் வந்தவர்கள், தொடர்பிலிருந்த குடும்பத்தினர் உள்பட அனைவரையும் கண்காணிக்கவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT