வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (டிச.31) காலை கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.
இதில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.
விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்தால் கேரளத்தை கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும்,
மற்ற மாநிலங்கள் உணவுப் பொருள்களை நிறுத்தினால் கேரள மக்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை எனவும் பேரவையில் முதல்வர் கூறினார்.