இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யவிருக்கும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். 

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். 

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10:15 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். 

முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய மின்தடை

வாய்ப்புகள் கைகூடும்: தினப்பலன்கள்!

சர்தார் வல்லபபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மெண்ட்

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT