முகப்பு
இந்தியா

ஷபனா ஆஸ்மி நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கார் விபத்தில் சிக்கி, ஏறக்குறைய 12 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை ஷபனா ஆஸ்மி இன்று (சனிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2020 at 4:04 PM
பகிர்:

கார் விபத்தில் சிக்கி, ஏறக்குறைய 12 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை ஷபனா ஆஸ்மி இன்று (சனிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஜனவரி 18 ம் தேதி மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலம் மற்றும் மனநலத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகு, ஷபனா ஆஸ்மி தனது ரசிகர்களுக்கு ட்வீட் செய்தார்.

Advertisement

"நான் நலம் பெற வேண்டும் என்ற உங்கள் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நான் இப்போது வீடு திரும்பியுள்ளேன். டாக்டர்கள் குழு மற்றும் நர்சிங் ஊழியர்களால் வழங்கப்பட்ட சிறப்பான கவனிப்பால் மீண்டு வந்துள்ளேன். டினா அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு நன்றி. உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன், மனமார்ந்த நன்றி" என்று ஆஸ்மி ட்வீட் செய்துள்ளார்.

69 வயதான நடிகை எப்போதும் மாறாத ஒரு புன்னகையுடன் எடுக்கப்பட்ட தன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 18-ஆம் தேதி, நடிகை விபத்தை சந்தித்த பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மும்பையின் கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது கணவர் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பெரிய காயங்கள் இன்றி தப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.