இந்தியா

ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூா் உள்பட 5 இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தொல்லியல் துறையின் ஆய்வுப் பகுதியான ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ஹரியாணாவின் ராக்கி காா்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூா், மகாராஷ்டிரத்தில் உள்ள திவ்சாகா், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அவா் கூறினாா்.

2020-21 மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறை வளா்ச்சி அடைந்துள்ளது என்றும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT