இந்தியா

ஹிந்துத்துவ கொள்கையில் எவ்வித சமரசமும் இல்லை: உத்தவ் தாக்கரே

ஹிந்துத்துவ கொள்கையில் சிவசேனைக் கட்சி உறுதியாக உள்ளது அதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனைக் கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

DIN

ஹிந்துத்துவ கொள்கையில் சிவசேனைக் கட்சி உறுதியாக உள்ளது அதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனைக் கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவசேனையில் சாம்னா பத்திரிகையில் திங்கள்கிழமை வெளியான அவரது பேட்டியில்,

நான் ஹிந்துத்துவ கொள்கையில் உறுதியாக இருக்கிறேன், எப்போதும் இருப்பேன். அதில் எந்த சமரசமும் இல்லை. ஹிந்துத்துவத்தின் மீது தங்களுக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் இருப்பது போன்று பாஜக செயல்படுகிறது. எனவே ஹிந்துத்துவத்தில் பாஜக தனது நிலைப்பாட்டை மட்டுமே சரியானது எனவும், மற்றவர்களின் நிலைப்பாட்டை தவறாக சித்தரிப்பதும் நகைப்புக்குரியதாக உள்ளது. 

நான் ஒருபோதும் ஹிந்து மதத்திலிருந்து விலகிச்செல்லவில்லை. என்னுடைய பொறுப்புகளில் இருந்து எப்போதும் ஓடி ஒளிந்ததில்லை, ஒருபோதும் அதுபோன்று செய்யும் எண்ணமும் ஏற்பட்டதில்லை. எனவே, யாரையும் புண்படுத்தாமல் என்னால் முடிந்த காரியங்களைச் செய்வேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT