இந்தியா

ஜிஎஸ்டி செலுத்தினால் லாட்டரியில் பரிசு..  புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு

DIN


ஜிஎஸ்டி முறையில் இருக்கும் புகார்களைக் குறைக்க, ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு லாட்டரி முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நேரடி மறைமுக வரி வாரியத்தின் இடைக்கால நிர்வாகி ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இந்த லாட்டரி முறையில் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

போலியான ரசீதுகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டவும் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும், வரி செலுத்தும் முறையை ஊக்குவிக்கவும், புகார்களைக் குறைக்கவும் இந்த லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜிஎஸ்டி செலுத்திய ஒவ்வொரு ரசீதும், லாட்டரியில் பரிசு வெல்வதற்கான லாட்டரி டிக்கெட்டுகளாகக் கருதப்படும் என்று ஜோசப் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT