இந்தியா

அதிக சிசிடிவி கேமராக்களைக் கொண்ட தெலங்கானம்; மிகக் குறைவாக இருக்கும் தலைநகரம்

தெலங்கான மாநிலம் உருவாக்கப்பட்டது முதலே, காவல்துறையின் மிக முக்கிய அங்கமாக சிசிடிவி கேமராக்கள் மாறியுள்ளன.

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

ஹைதராபாத்: தெலங்கான மாநிலம் உருவாக்கப்பட்டது முதலே, காவல்துறையின் மிக முக்கிய அங்கமாக சிசிடிவி கேமராக்கள் மாறியுள்ளன.

குற்றங்களை தடுப்பது முதல், குற்றவாளிகளை விரைவாகப் பிடிப்பது வரை மிக முக்கியப் பங்காற்றும் சிசிடிவி கேமராக்கள் அதிகம் இருக்கும் மாநிலமாகவும் தெலங்கானம் திகழ்கிறது.

ஜனவரி, 2019 வரை தெலங்கான மாநிலத்தில் மட்டும் 2,75,528 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டில் பொதுவிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மொத்த கேமராக்களில் இது 64% ஆகும். இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் நாட்டின் தலைநகரான புது தில்லியில் வெறும் 5,332 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே உள்ளன.

கடந்த நவம்பர் மாதம் கால்நடை மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கிலும், வாரங்கல் பகுதியில் 9 மாதக் குழந்தை கொலை வழக்கிலும் குற்றவாளிகளைக் கைது செய்ய சிசிடிவி கேமரா பதிவுகள்தான் பெரிதும் உதவின.

அந்த வகையில், பல்வேறு குற்ற வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதில், தெலங்கான மாநில காவல்துறை முதல் இடத்தில் உள்ளது. தெலங்கான மாநிலத்தின் காவல்துறையில் பல்வேறு வசதி வாய்ப்புகளும் கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT