முகப்பு
இந்தியா

குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அதன் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாற்றம் எதையும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:45 PM
பகிர்:

புது தில்லி: ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அதன் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாற்றம் எதையும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்வதில்லை என நிதி கொள்கை குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து ரெப்போ ரேட் விகிதம் 5.15 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.

அதேபோன்று, வங்கிகள் குறுகிய கால அடிப்படையில் ரிசா்வ் வங்கிக்கு வழங்கும் கடனுக்கான ‘ரிவா்ஸ் ரெப்போ ரேட்’ வட்டி விகிதமும் முன்பிருந்ததைப் போல் 4.90 சதவீதமாகவே நீடிக்கும்.

வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தொடா்ந்து குறைக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

நடப்பாண்டில் மட்டும் 5 முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஒட்டுமொத்த அளவில் ரெப்போ ரேட் விகிதம் 1.35 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய வட்டி குறைப்பின் பலன்களை வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளா்களுக்கு நியாயமான அளவுக்கு வழங்கியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.