இந்தியா

மகாராஷ்டிராவில் தலித் பெண் உயிரோடு எரித்துக் கொலை 

மகாராஷ்டிராவில் தலித் பெண் ஒருவர்  உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IANS

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் தலித் பெண் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுரங்காபாத் அருகே சில்லோட் அந்தாரி கிராமத்தில் 50 வயதான தலிப் பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள டாஸ்மாக் உரிமையாளரான சந்தோஷ் மொஹைட் அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரைத் தடுத்துநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தலித் பெண்ணை, தூக்கி வீசி தாக்கி, அவரது உடலில் மண்ணெண்னை எடுத்து, ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அலறல் சத்தத்துடன், வீட்டிலிருந்து புகை ஏற்படுவதைக் கண்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், 95 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த பெண்யின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கங்களைக் கண்டறியவும் முயற்சி செய்து வருவதாக அவுரங்காபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், வர்தாவில் உள்ள ஹிங்காங்கட் நகரில் கடந்த திங்கள்கிழமை காலை 25 வயது பெண் விரிவுரையாளர் அங்கிதா பிசுடே கல்லூரி வளாகத்தில் எரித்த 36 மணி நேரத்திற்குள் மகாராஷ்டிராவில் நடந்த 2வது சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவத்திற்குக் கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT