முகப்பு
இந்தியா

தில்லியில் தீப்பிடித்த அடுக்கு மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து விபத்து

தில்லியில் பிஜ்வாசன் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:46 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் பிஜ்வாசன் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது.

பிஜ்வாசன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது நேரம் கழித்து கட்டடம் மளமளவென சரிந்து விழுந்தது. கட்டடம் சரிந்து விழுந்ததில் யாருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அம்பேத்கர் காலணியில் உள்ள இந்த கட்டடம் தொழிற்சாலை கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 14 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.