முகப்பு
இந்தியா

உ.பி.யில் வெடிகுண்டு மிரட்டல்: சமூக ஊடகங்களில் அச்சுறுத்திய நபர் கைது 

உத்தரப் பிரசேதத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக குறுந்தகவல் மூலம் அச்சுறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:46 PM
கோப்புப் படம்
பகிர்:

தியோரியா: உத்தரப் பிரசேதத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

மாக் மேளா மற்றும் தியோரியா மஹோத்ஸவ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தபப்டும் என கடந்த புதன்கிழமையன்று மர்ம நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வந்தார். 

இந்நிலையில், ராம்பூர் கர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் அந்த குறுந்தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விசாரணை மேற்கொண்டார். 

விஷ்ணுபூர் சிர்கிஹ்வாவில் வசிக்கும் நசிருதீன் அன்சாரிக்கு சொந்தமான தொலைப்பேசி எண்ணிலிருந்து இந்த செய்தி முதல்முறையாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அன்சாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.