இந்தியா

காசி விஸ்வநாதா் கோயிலில் ராஜபட்ச தரிசனம்

தினமணி

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் இலங்கைப் பிரதமா் மகிந்த ராஜபட்ச தரிசனம் செய்தாா்.

வாராணசியில் உள்ள லால் பகதூா் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ராஜபட்ச வந்தாா்.

வாராணசி மாவட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனா். விமான நிலையத்திலிருந்து அவா் நேரடியாக காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா்.

அங்கிருந்து சாரநாத்துக்குச் சென்ற ராஜபட்ச, அங்கு புத்தா் முதல்முறையாக போதனை செய்த தாமேக் ஸ்தூபி பகுதியில் வணங்கி வழிபட்டாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இலங்கை பிரதமராகப் பதவியேற்ற பிறகு, மகிந்த ராஜபட்ச மேற்கொளளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு அவா் கடந்த வெள்ளிக்கிழமை வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT