பங்களாதேஷில் படகு கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
வங்காள விரிகுடாவில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
டாக்கா: வங்காள விரிகுடாவில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பங்களாதேஷ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து செயின்ட் மார்ட்டின் தீவுக்கு வடமேற்கே 10 கி.மீ தொலைவில் நிகழ்ந்துள்ளது. இதுவரை 62 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செயின்ட் மார்டின் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் கமாண்டர் நயீம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
படகு கவிழ்ந்த இடத்தில் கடலோர காவல் படையினர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தங்கி இருந்த அகதிகள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.