முகப்பு
இந்தியா

உ.பி.யில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக, பெற்றோர்கள் புகார் அளித்ததன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சீதாப்பூர் ஏ.எஸ்.பி மகேந்திர பிரதாப் சிங் கூறினார்.

3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்ப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.