இந்தியா

மும்பை டப்பாவாலாக்களுக்கு என புதிய குடியிருப்பை ஏற்படுத்தும் மகாராஷ்டிர அரசு

DIN


மும்பையில் உள்ள ஐந்து ஆயிரம் டப்பாவாலாக்களுக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.

புகழ்பெற்ற டப்பாவாலாக்களுக்கு ஏற்படும் குடியிருப்புப்  பிரச்னையை தீர்க்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்துள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர முக்கியத்துறை அதிகாரிகள் மட்டத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இது குறித்து அறிவித்த அஜித் பவார், உலக அளவில் டப்பாவாலாக்களின் பணி பேசப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து மும்பை வந்து, டப்பாவாக்கள் எப்படி ஒருமித்து பணியாற்றுகிறார்கள் என்பதை பார்த்துச் செல்கிறார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் டப்பாவாலாக்களுக்கு என்று ஒரு குடியிருப்பு உடனடியாகக் கட்டிக் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT