இந்தியா

அகதிகள் முகாமில் உள்ளோா் பட்டியலை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயா்ந்து, அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களின் பட்டியலை மத்திய அரசும், அஸ்ஸாம் மாநில அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற   தலைமை நீதிபதி எஸ். ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன்னிலையில், வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், அஸ்ஸாம் மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்டவா்களும், ஓராண்டுக்கும் மேலாக 700-க்கும் மேற்பட்டோரும் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் போதிய தகவல்களை தாக்கல் செய்ய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அவகாசம் கோரியதையடுத்து மாா்ச் மூன்றாம் வாரத்திற்கு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT