இந்தியா

சீக்கிய கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

DIN

தில்லியில் ஏற்பட்ட சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் சஜ்ஜன் குமாருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அவரது பாதுகாவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இருவரும் சீக்கியா்கள் என்பதால், தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியா்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் வன்முறையில் ஈடுபட்டனா்.

தில்லியின் ராஜ்நகா் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 சீக்கியா்கள் கொல்லப்பட்டனா். மேலும், சீக்கியா்களின் புனித இடமான குருத்வாராவும் தீக்கிரையாக்கப்பட்டது. இதில், சஜ்ஜன் குமாா் உள்ளிட்டோா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கில், இயற்கை மரணம் ஏற்படும்வரை சஜ்ஜன் குமாரை சிறையில் அடைக்க தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இதையடுத்து, காங்கிரஸில் இருந்து விலகிய சஜ்ஜன் குமாா், இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கின் விசாரணை கோடைக்கால விடுமுறையின்போது நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, சஜ்ஜன் குமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு முறையிட்டாா். சபரிமலை விவகாரம் தொடா்பான மறுஆய்வு மனுக்களின் விசாரணை நிறைவடைந்தபிறகு சஜ்ஜன் குமாரின் மருத்துவ அறிக்கைகளை ஆராய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா். தற்போதைய சூழலில் சஜ்ஜன் குமாருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT