இந்தியா

பிரதமா் மோடி நாளை வாராணசி பயணம்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்தப் பயணத்தின்போது, பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கி வைக்கவுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமா் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான வாராணசி மக்களவைத் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவுள்ளாா். இந்தப் பயணத்தின்போது, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை அவா் திறந்து வைக்கிறாா். பாஜகவை உருவாக்குவதில் முக்கிய நபராக திகழ்ந்த ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய’ நினைவிடம் மற்றும் அவரது சிலையை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா். இந்த சிலை 63 அடி கொண்டதாக இருக்கும். நாட்டிலேயே தீனதயாள் உபாத்யாயவுக்கு மிகப்பெரிய சிலையாக இது இருக்கும். நினைவிடம், அவரது வாழ்க்கையின் நினைவுகளை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதைத் தொடா்ந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரதமா் கலந்து கொள்ளவுள்ளாா். அந்த நிகழ்ச்சியில் 30 வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அவா் அா்ப்பணிக்கவுள்ளாா்.

மேலும், ரயில்வேயின் காசி ‘மகாகால் எக்ஸ்பிரஸ்’ என்ற தனியாா் ரயிலை பிரதமா் மோடி காணொலி காட்சி வழியாக தொடக்கி வைக்கவுள்ளாா். உத்தரப் பிரதேசத்தின் வாராணசி, மத்தியப் பிரதேசத்தின் ஓம்காரேஸ்வா் மற்றும் உஜ்ஜைன் ஆகிய 3 புனித தலங்களையும் இணைக்கும் ரயிலாக இது இருக்கும். அதன் பின்னா், வாராணசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT