இந்தியா

மீண்டும் கேஜரிவாலின் கவனத்தை ஈர்க்கத் தவறிய குழந்தை கேஜரிவால்

DIN


அரவிந்த் கேஜரிவாலின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குழந்தை கேஜரிவால் மீண்டும் ஒரு முறை கேஜரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த குழந்தை கேஜரிவால் அரவிந்த் கேஜரிவாலின் கவனத்தை ஈர்க்கத் தவறினார்.

தில்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 11-ஆம் தேதி, ஆம் ஆத்மி தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடி வந்தனர். அப்போது, அரவிந்த் கேஜரிவால் போன்று உடையும், தொப்பியும் அணிந்திருந்த குழந்தை இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் குழந்தை ஆம் ஆத்மியின் ஆதரவாளர்களான ராகுல் தோமர் மற்றும் மீனாக்ஷி தோமரின் ஒரு வயது மகன் ஆகும். அந்தக் குழந்தையின் பெயர் ஆவ்யன் தோமர். 

வாக்கு எண்ணிக்கையின்போது இணையத்தைக் கலக்கிய ஆவ்யன் தோமர், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனார். 

அவருக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, பதவியேற்பு விழாவுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ஆம் ஆத்மி சுட்டுரைப் பதிவில் வெளியிட்டது. 

இதையடுத்து, ஆவ்யன் தோமர் மீண்டும் கேஜரிவால் போல் வேடமணிந்து இன்று பதவியேற்பு விழாவிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆம் ஆத்மி தலைவர்களான ராகவ் சத்தா மற்றும் சோம்நாத் பாரதி போன்றவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஆனால், இந்த முறையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆவ்யன் தோமரால் அரவிந்த் கேஜரிவாலின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. 

ராகுல் தோமர் மற்றும் மீனாக்ஷி தோமருக்கும் இப்படி குழந்தைக்கு கேஜரிவால் வேடமணிவிப்பது முதன்முறையல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது 4 வயது பெண் குழந்தைக்கும் இதேபோல் கேஜரிவால் ஆடையை அணிவித்திருந்தனர். அந்தப் புகைப்படங்களும் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT