இந்தியா

முழு மதுவிலக்கு சாத்தியமில்லை: அமைச்சர் தகவல்

மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று பேரவையில் அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

DIN

மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று பேரவையில் அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ராஜஸ்தான் பேரவையில் முழு மதுவிலக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சாந்தி தாரிவால் பதிலளித்துப் பேசுகையில்,

முழு மதுவிலக்கு அமல்படுத்த தேவையான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் துணை தலைமைச் செயலர் தலைமையில் கடந்த மார்ச் 26, 2013ல் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 10, 2013ல் அந்தக் குழு வழங்கிய அறிக்கையின் படி ராஜஸ்தான் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமற்றது எனவும், தேவைப்பட்டால் மது விற்பனைத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

அதேவேளையில் முழு மதுவிலக்கை அமல்படுத்த தற்போதைய அரசுக்கு எவ்வித எண்ணமும் இல்லை. மதுக்கடைகளை திறக்கும் மற்றும் மூடும் நேரங்களை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த தகவல்கள் மக்களிடம் சென்றடைய முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும். மது விற்பனைக் கொள்கை முறைகள் திருத்தி அமைக்கப்படும். போலி மது விற்பனை தடுக்கப்படும். 

பொது இடங்களில் மது உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கு அதிகபட்ச அபராதத் தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மது விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயங்காத மதுக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்! மரத்தில் மோதி விபத்து! 5 பேர் காயம்! | California

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT