இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது: போலீஸ் தீவிர விசாரணை

DIN

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திய எல்லைக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

அப்போது தப்பர் பதான் பகுதியில் பதுங்கியிருந்த உள்ளூர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஜுனைத் ஃபரூக் பண்டித் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ஒரு சீனத் துப்பாக்கி, 13 குண்டுகள் மற்றும் 2 துப்பாக்கி மேகஸீன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாராமுல்லா டிஐஜி எம்.சுலைமான் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத சதிச்செயல்கள் தொடர்பாக அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT